Sunday, September 6, 2009


ரேஸ் குதிரைக்கு ரம் குடுப்பாங்கலாமே என்பது பெரும்பாலான நண்பர்கள் என்னிடம் கேட்கும் கேள்வி. எனக்கு தெரிந்தவரை அப்படி யாரும் கொடுப்பதில்லை. உலகமெங்கும் ரேஸ் குதிரைகளுக்கு ஊக்க மருந்து பரிசோதனை மிக கடுமையாக கடைபிடிக்க படுகிறது. ரேசில் முதல் மூன்று அல்லது ஐந்து இடங்களை பிடிக்கும் குதிரைகளுக்கு அதன் சிறுநீர் அல்லது ரத்த மாதிரி ரேஸ் முடிந்தபின் சேகரிக்கப்பட்டு அதில் ஊக்க மருந்துகள் பயன் படுத்தப்பட்டதார்கான அறிகுறிகள் உள்ளனவா என பரிசோதிக்கப்படுகிறது, இதற்கென்றே பிரத்யேகமான சோதனை சாலைகள் ஒவ்வொரு குதிரை பந்தய மைதானத்திலும் உண்டு மேலும் சில சமயங்களில் மறு பரிசோதனை செய்ய இங்கிலாந்து அல்லது துபாயில் உள்ள சோதனைசாலைகளுக்கு அனுப்பபடுவதுண்டு. மேலும் குதிரை பந்தய மைதானங்களில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் அன்றி மற்றவர்கள் குதிரைகளுக்கு எந்த விதமான மருந்துகளையும் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை. ஆக இதையெல்லாம் மீறி ரம்,விஸ்கி,பிராந்தி கொடுப்பது கடினம்தான். ஒரு முறை நான் குதிரை பண்ணையில் பணிபுரியும்போது பரிசோதனை முயற்சியாக ஒரு குதிரைக்கு ரம் கொடுத்து என்னதான் ஆகிறது என பார்க்க நானும் என்னுடன் பணி புரிந்த எழிலன் என்னும் நண்பரும் முடிவு செய்தோம், பொருளாதார ரீதியாக ரம் கொடுப்பது எங்களுக்கு முடியாத காரியம் என்பதால், உள்ளூரிலேயே கிடைக்கும் பட்டை சாராயம் கொடுக்க முடிவு செய்தோம், அவர் எங்கிருந்தோ மூன்று கிளாஸ் முப்பது ரூபாய்க்கு சாராயம் வாங்கி வந்தார், நாங்கள் அதில் பாதியை முதலில் டியுப் வழியாக அதன் இரைப்பைக்குள் செலுத்தினோம், ஒரு மணி நேரத்தில் மட்டை ஆகி விடும் என்ற எங்கள் நினைப்பை தவிடுபொடியாக்கி சும்மா கன் மாதிரி நிக்குது, திரும்ப மீதி இருந்த சரக்கையும் டியுப் மூலமாக இரைப்பையில் செலுத்தினோம் , கொஞ்சம் கூட அசர வில்லை அந்த குதிரை. அதன் நடத்தையில் ஒரு சிறிய மாற்றம் கூட நாங்கள் காண வில்லை. ரம் கொடுத்தால் என்ன ஆகின்றது எங்கள் ஆராய்ச்சி தோல்வியை தழுவியது. இதன் மூலம் நாங்கள் அறிந்து கொண்டது என்னவென்றால் போதை வேண்டுமென்றால் முறைப்படி ஊறுகாய் அல்லது மிக்சர் தொட்டுக்கொண்டு சோடாவில் கலந்து அடித்தால் தான் அது குதிரையாய் இருந்தாலும் கிக் வரும் என்பதுதான்.


நாளை பார்ப்போம்....குதிரைக்கு கொள்ளு கொடுக்கணும்....

Saturday, September 5, 2009

குதிரை விலை


குதிரையுடைய விலை அதனுடைய அப்பா, அம்மா,சகோதரர்கள்,சகோதரிகள் மற்றும் உறவினர்களின் ரேஸ் வெற்றி மற்றும் எவ்வளவு பணம் ஈட்டியது என்பதை பொறுத்தது. மேலும் அவற்றின் கால்கள்,உடலமைப்பு (இந்தியாவில் சுழி கூட பார்க்கப்பட்ட் பின்னர்தான்)என பல விஷயங்களும் பார்க்கப்பட்டு பின்னரே விலை நிர்ணயிக்கப்படுகிறது. சில குதிரைகள் கோடிகளில் விலை பேசப்படும், சில இலவசமாக கொடுத்தால் கூட எடுக்க ஆள் இருக்காது. அமெரிக்காவின் கெண்டகியில் உள்ள கிங் மாம்போ என்ற ஆண் குதிரை இனபெருக்கத்திற்காக மட்டும் உபயோகபடுத்தப்படுகிறது, ஒரு முறை இனபெருக்கம் செய்து குட்டி போட வைக்க கட்டணம் 2,50,000 அமெரிக்கா டாலர்கள் ஆகும். வருடத்திற்கு 120 முதல் 150 குதிரைகளை இனப்பெருக்கம் செய்யும். துபாய் ரேசிங் கார்னிவல் 2008 -ல் உலக கோப்பையை வென்ற கர்லின் என்ற குதிரை அப்போது அறுபது மில்லியன் டாலருக்கு விலை பேசப்பட்டதாகவும் ஆனால் அதன் உரிமையாளர் விற்க மறுத்து விட்டதாகவும் அப்போது பேசப்பட்டது. கிங் மாம்போ என்ற குதிரையின் விலை தான் அதுவரை மிக அதிகமாக இருந்தது (40 மில்லியன் டாலர், கிட்டத்தட்ட் 200 கோடி), நம் ஊரில் நான் பணியில் இருந்த பொது 2004 ஆம் ஆண்டு சில குதிரை கள் ஒரு கோடிக்கும் மேல் விலைகொடுத்து வாங்கப்பட்டதாக கூறப்பட்டது, நம் ஊரில் வருமான வரிக்கு பயந்து யாரும் உண்மையான விலை சொல்லுவதில்லை. ஆனால் இப்போதும் ஒரு சில குதிரைகளின் குட்டிகள் சராசரியாக முப்பது லட்சத்திற்கும் மேல் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

Thursday, September 3, 2009






குதிரைக்கு எலும்பு முறிவு ஏற்படும்போது அதை சுட்டு கொன்னுடுவீங்கலாமே என்பது பலரும் என்னிடம் கேட்கும் கேள்வி , பழைய காலத்தில் சுட்டு க்கொள்வது என்பது நடந்ததுதான் , ஆனால் இப்போது வலி தெரியாமல் கொல்ல எத்தனையோ மருந்துகl வந்து விட்டது . எல்லா விதமான எலும்பு முறிவுகளுக்கு கொல்வது கிடையாது. இந்த படத்தில் உள்ளது போன்ற முறிவுகள் ஏற்படும்போது, குதிரைகளே அந்த காலில் மேலும் கால் ஊன்றி நின்று எலும்பு முறிவை மேலும் அதிகமாக்கி அதனால் ஏற்படும் ரத்த போக்கின் விளைவாக இறந்து போவது உண்டு. என்னதான் அந்த கால்கள் அசையாமல் நகராமல் இருக்க கட்டுக்கள் போட்டாலும் kuthiraikalaal சும்மா இருக்க முடியாது, மேலும் அந்த காயத்தை பெரிதாக்கி மோசமடையுமே தவிர காயம் பட்ட கால்களை மனிதர்கள் போல் ஆடாமல் அசையாமல் வைத்திருக்காது. கருணைக்கொலை செய்வது பற்றி கால்நடை மருத்துவர்கள் மிக அவசரப்பட்டு முடிவு எடுக்கின்றார்கள் என மிருக வதை தடுப்பு ஆர்வலர்கள் குற்றம் சாட்டுவது உண்டு, சிறிய வகை எலும்பு முறிவுகளை நான் பலமுறை வெற்றிகரமாக சிகிச்சை அளித்தது உண்டு, ஆனால் படத்தில் இருப்பது போன்ற முறிவுகள் கருணைக்கொலை செய்யப்படுவதுதான் சரியான முடிவு, படத்தில் உள்ள குதிரைக்குட்டி(ஒன்பது மாதங்கள் வயது) மேயும் இடத்தில் வேகமாக ஓடி கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்டது, நான் சென்று பார்க்கும் பொது தோல் மட்டும்தான் ஒட்டிக்கொண்டு இருந்தது, எலும்பு நொறுங்கி பொய் இருந்தது. அதிக ரத்த போக்கினால் சிறிது நேரத்திலேயே இறந்து விட்டது.

Saturday, February 21, 2009

மூட நம்பிக்கைகளில் பல வகைகள் உண்டு. குதிரை துறையில் பல வகையான மூட நம்பிக்கைகள் அன்றாடம் கடைப்பிடிக்கப்படும். குதிரை இனப்பெருக்கத்திற்காக எடுத்து வரும்போது , ஒரு குறிப்பிட்ட நபர் கையால் எடுத்து வரப்படும்போது சில காரணங்களால் mating நடக்க வில்லை என்றால், வேறொரு நபர் handle செய்ய அறிவுருத்தப்படுவார். குதிரை சினையா இல்லையா என scan செய்யப்படும் பொது பெண் குதிரையின் வாலை ஒரு குறிப்பிட்ட நபர் பிடிப்பார், scan செய்யப்படும் குதிரைகள் இரண்டு மூன்று தொடர்ச்சியாக சினை இல்லை என்று அறியப்பட்டால் அந்த நபர் மாற்றப்படுவார், பின்னர் வேறொரு நபர் வால் பிடிக்கப்பணிக்கப்படுவார். அந்த நபரின் அதிர்ஷ்டம் தேயும் வரை அவரே தொடருவார். ஒரு குறிப்பிட்ட நபர் வால் பிடிப்பதால் எப்படி குதிர சினை ஆகும் என்ற அறிவுப்பூர்வ மான கேள்வி எல்லாம் கேட்கப்படாது. செட்டிநாடு குதிரைப்பன்னையில் மாதம் ஒரு முறை கணபதி ஹோமம் நடத்தப்படும். செவ்வாய் கிழமைகளில் தான் சாஸ்திரிகள் வந்து ஹோமம் செய்வார்கள் அன்றுதான் மற்ற இடங்களில் பூஜைகள் இருக்காது. அதில் அவர்கள் விடும் பந்தா வேறு எங்களைபோன்றவர்களுக்கு எரிச்சலை உண்டாக்குவதாக அமையும். "மாமா இங்கப்பாருங்கோ பூஜை செஞ்ச நேரம் குட்டிப்போட்டுடுத்து" என பெருமையாக சொல்லிக்கொள்வார்கள், அது இவர்கள் பண்ணிய பூஜையில் குறைபிரசவம் ஆகி ரெண்டு நாள் கழித்து மண்டையை போட்டு விடும் என்பது எங்களுக்குத்தான் தெரியும். நானும் ஒரு விஷயத்தை கவனித்தேன், அவர்கள் வந்து பூஜை செய்து விட்டு சென்றால் ரெண்டு நாளுக்குள் ஒரு குதிரையாவது மண்டையைப்போட்டு விடும்.(இது என்னோட மூட நம்பிக்கை)

Saturday, January 24, 2009

பீர்ருடைய கிளினிக் மற்றும் பணிசூழலை பார்க்கும் பொது கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கு. ஏனென்றால் ஒரு சில நேரங்களில் சில முட்டாள் ஒனர்களிடம் நான் மாட்டிக்கொண்டு முழித்த சம்பவங்கள் எனக்கு நினைவு வருகிறது. ஒரு முறை ஒரு racing filly க்கு colic. அதை சிகிச்சை அளிக்க என்னை அழைத்தார்கள், நானும் சென்று என்னிடம் இருந்த அனைத்து சர்வ ரோக நிவாரநிகளையும் உபயோகப்படுத்தினேன், பின்னரும் கொஞ்சமும் குணமாக வில்லை, rectal exam செய்த போது(nephro-splenic entrapment of intestine) அறுவை சிகிச்சை மூலமே அதை சரி செய்ய முடியும் என தெரிந்து கொண்டேன். பின்னர் நான் அவர்களிடம் அதை எடுத்து கூறினேன், அவர்கள் என்னிடம் அந்த குதிரை urine போகத்தான் கஷ்டப்படுகிறது ஆகவே அதற்கு Lasix கொடுத்தால் சரியாகி விடும் என்றார்கள், நான் அவர்களிடம் அதனால் ஒன்றும் பயனில்லை என்று சொல்லிவிட்டு கிளம்பி சென்று விட்டேன். ஒரு மணி நேரம் கழித்து திரும்ப அந்த குதிரை எப்படி இருக்கிறது என பார்க்க சென்றேன், அப்போது அந்த குதிரையை ஸ்தபுலுக்கு வெளியே வைத்து ஒரு ஆண் குதிரையை வைத்து covering செய்து கொண்டு இருந்தார்கள், ஆண் குதிரை மேலே ஏறியவுடன் பெண் குதிரை அந்த இடத்திலேயே விழுந்து இறந்து விட்டது. நான் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களிடம் விசாரித்தேன், அதற்கு அந்த குதிரை சிறுநீர் போகும் வழியில் அடைத்து உள்ளது, ஆகவே அதை cover செய்தால் அடைப்பு நீங்கி சிறுநீர் போய் விடும் என்று ஒரு அனுபவ சாலி சொன்னார் அதுதான் முயற்சி செய்தோம் ஆனால் குதிரை செத்து விட்டது என்றார்கள். நான் என்னுடைய அறைக்கு வந்து அதை நினைத்து பல முறை சிரித்தேன்.

Friday, January 23, 2009

பீல்ட் மென் சுப்பிரமணி அவருடைய சைக்கிளில் டாக்டர் "கா.சு.மணியன்" என எழுதி வைத்திருப்பார், அதைப்பார்த்தால் பெரிய டாக்டர் க்கு மிக கோபம் வரும். பீல்ட் மென் சித்த மருத்துவத்தில் கொஞ்சம் அனுபவம் உள்ளவர் அதனால், அனுபவ சித்த மருத்துவர்கள் சங்கத்தில் உறுப்பினர், அவர்கள் சங்க கூட்டம் மாதம் ஒரு முறை நடைபெறும், அதற்கு வரும் அழைப்பு கடிதத்தில் அவருடைய பெயருக்கு முன் டாக்டர் என போட்டிருப்பது பெரிய டாக்டரை எரிச்சல் படுத்தும். ஆனால் இதை எல்லாம் பீல்ட் மென் கண்டு கொள்ள மாட்டார். அவருடைய (விதண்டா)வாதம் என்னவென்றால் குதிரைகளுக்கு பெரிய டாக்டர் போல, பண்ணையிலுள்ள மரங்களுக்கெல்லாம் அவர்தான் டாக்டர் ,ஏனென்றால் அவர்தானே உரம், பூச்சி மருந்து கொடுக்கிறார். ஆகவே ரெண்டு பெரும் சமம் என்பது அவர் நினைப்பு.

Saturday, January 10, 2009

pannaiyil ஜால்ரா அடிப்பதற்கு வரைமுறையே இல்லாமல் இருக்கும், hospital assistants ராதா கிருஷ்ணன் மற்றும் அழகிரி இடையே பெரிய போட்டியே நடக்கும், covering நடைபெறும் போது பெரிய டாக்டர் அணிந்து கொள்ளும் arm guard, helmet ஆகியவற்றை அவரிடம் எடுத்து கொடுப்பதற்கு அவர்களிடையே நடைபெறும் போட்டி நகைச்சுவையாக இருக்கும், ராதா கிருஷ்ணன் முன்னாலேயே வந்து விட்டால் டாக்டருக்கு தேவையான சாமான்களை எடுத்து ஒளித்து வைத்து விடுவான், அவன் கையாலேயே கொடுத்தால்தான் ஐயாவின் கவனத்தை கவரமுடியும் என்பதற்காக. ஒரு முறை முன்னாலேயே வந்து அவன் எடுத்து ஒளித்து வைத்துவிட, பெரிய டாக்டர் அவனுக்கு வேறு வேலை கொடுத்து வேறெங்கோ அனுப்பி விட்டார், அவருக்கு தேவையான helmet மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கடும் கோபமடைந்து, அவர் risk எடுக்காமல் junior டாக்டர்களை விட்டு வேலை வாங்கினார்.

Monday, January 5, 2009

ஒரு முறை வெளி நாட்டிலிருந்து இருபது சினை குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டது, அதற்கு சிகிச்சை செய்வதற்கு டாக்டர் ராஜிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது, அவருக்கு உதவியாளராக நான் இருந்தேன், பராமரிக்கும் பொறுப்பு "முட்டை" தங்கவேல் வசம் அளிக்கப்பட்டது, அவர்தான் அந்த பிளாக் ஜமேதார், அதில பல குதிரைகள் சரியாக உணவு உண்ணவில்லை, பருவ நிலை மாற்றம், தீனி மாற்றம் என பல காரணங்களால் எல்லாவற்றுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம். அதில் ஒரு குதிரை உண்ணாவிரதம் போல் எது கொடுத்தாலும் உண்ணாமல் அடம் பிடித்தது. அதற்கு ரத்தக்குழாய் மூலம் குளுகோஸ் மற்றும் சத்துக்கள் செலுத்தப்பட்டது, Hivit எனப்படும் multi-vitamin மருந்தும் செலுத்தப்பட்டது, முதல் நாள் ஒன்றும் ஆக வில்லை, அடுத்த நாள் அந்த மருந்தை செலுத்தியபோது குதிரைக்கு shock ஏற்பட்டு சில நொடிகளில் இறந்து விட்டது. எங்களுக்கெல்லாம் பெரிய அதிர்ச்சியாக இருந்தது, அப்போது பெரிய டாக்டர் அங்கு இல்லை, முட்டை தங்கவேல் புலம்பி தள்ளி விட்டார், பெரிய டாக்டர் வந்தால் என்னை வீட்டுக்கு அனுப்பிடுவார், என்ன செய்வது இப்படி ஆயிடுச்சே என புலம்பிக்கொண்டே இருந்தார், பெரிய டாக்டர் உம் வந்து விட்டார், அவர் முகத்தை பார்த்தாலே தெரிகிறது அவர் கடும் கோபத்தில் இருக்கிறார் என்று. யாரும் எதிர் பாராத விதமாக முட்டை தங்கவேல் "ஐயா, போயிடுச்சே, என்று தரையில் புரண்டு மிக சத்தமாக, மார்பில் அடித்துக்கொண்டு பலமாக ஒப்பாரி வைத்து அழ தொடக்கி விட்டார், அவருடைய இந்த செயல் பெரிய டாக்டர்-ஐ அப்படியே அதிர்ச்சி அடைய செய்து சிலை யாக்கி விட்டது. அவரால் கோபத்தை வெளிப்படுத்த முடிய வில்லை, மாறாக தங்கவேலுக்கு சமாதானம் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். எவ்வளவு பெரிய துன்பத்தையும் நேராக சந்திப்பது எப்படி என்பதை தங்கவேளுவிடமிருந்து எல்லோரும் கற்றுக்கொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்தது இந்த சம்பவம்.