Monday, January 5, 2009
ஒரு முறை வெளி நாட்டிலிருந்து இருபது சினை குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டது, அதற்கு சிகிச்சை செய்வதற்கு டாக்டர் ராஜிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது, அவருக்கு உதவியாளராக நான் இருந்தேன், பராமரிக்கும் பொறுப்பு "முட்டை" தங்கவேல் வசம் அளிக்கப்பட்டது, அவர்தான் அந்த பிளாக் ஜமேதார், அதில பல குதிரைகள் சரியாக உணவு உண்ணவில்லை, பருவ நிலை மாற்றம், தீனி மாற்றம் என பல காரணங்களால் எல்லாவற்றுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம். அதில் ஒரு குதிரை உண்ணாவிரதம் போல் எது கொடுத்தாலும் உண்ணாமல் அடம் பிடித்தது. அதற்கு ரத்தக்குழாய் மூலம் குளுகோஸ் மற்றும் சத்துக்கள் செலுத்தப்பட்டது, Hivit எனப்படும் multi-vitamin மருந்தும் செலுத்தப்பட்டது, முதல் நாள் ஒன்றும் ஆக வில்லை, அடுத்த நாள் அந்த மருந்தை செலுத்தியபோது குதிரைக்கு shock ஏற்பட்டு சில நொடிகளில் இறந்து விட்டது. எங்களுக்கெல்லாம் பெரிய அதிர்ச்சியாக இருந்தது, அப்போது பெரிய டாக்டர் அங்கு இல்லை, முட்டை தங்கவேல் புலம்பி தள்ளி விட்டார், பெரிய டாக்டர் வந்தால் என்னை வீட்டுக்கு அனுப்பிடுவார், என்ன செய்வது இப்படி ஆயிடுச்சே என புலம்பிக்கொண்டே இருந்தார், பெரிய டாக்டர் உம் வந்து விட்டார், அவர் முகத்தை பார்த்தாலே தெரிகிறது அவர் கடும் கோபத்தில் இருக்கிறார் என்று. யாரும் எதிர் பாராத விதமாக முட்டை தங்கவேல் "ஐயா, போயிடுச்சே, என்று தரையில் புரண்டு மிக சத்தமாக, மார்பில் அடித்துக்கொண்டு பலமாக ஒப்பாரி வைத்து அழ தொடக்கி விட்டார், அவருடைய இந்த செயல் பெரிய டாக்டர்-ஐ அப்படியே அதிர்ச்சி அடைய செய்து சிலை யாக்கி விட்டது. அவரால் கோபத்தை வெளிப்படுத்த முடிய வில்லை, மாறாக தங்கவேலுக்கு சமாதானம் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். எவ்வளவு பெரிய துன்பத்தையும் நேராக சந்திப்பது எப்படி என்பதை தங்கவேளுவிடமிருந்து எல்லோரும் கற்றுக்கொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்தது இந்த சம்பவம்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment